ஜூலை 14, 2009 Thottarayaswamy ஆல்
* உன் இமைகளை
சிறகடித்து நீ சிரிக்கும் போதேல்லாம்
பூமிக்கும் வானுக்கும் மத்தியில்
வாழ்ந்துவிடுகின்றது
எனது உயிர்.
* இதழ்குவித்து காத்துகிடக்கின்றது
என் தோட்டத்தில் ரோஜா செடிகள்
எப்போதடி உன் இதழ்குவித்து
முத்தமிட்டு, இதழ்பிரிக்கச் செய்வாய்
ரோஜாக்களை!.
* நான் இமைக்காமல்
பார்க்க துடிப்பது
நீ இமைப்ப்தைத்தான்.
தேவதைகளின் ஊர்வலம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது இமை, படிமங்கள், ரோஜா | Leave a Comment »
ஜனவரி 7, 2009 Thottarayaswamy ஆல்

நாம் சண்டையிட்டு
பிரிந்த அந்த
கடற்கறை சந்திப்பின்
அடையாளச்சின்னம்
இன்னமும்
அங்கேயே வானம்பார்த்து
வரமொன்று கேட்டு
தவம் செய்கின்றது.
மனசை நகங்களில்
வைத்திருக்கும் தேவதையே
உன் கைசேர!
என்னைபோலவே!!
தேவதைகளின் ஊர்வலம் இல் பதிவிடப்பட்டது | 7 மறுமொழிகள் »
ஜனவரி 5, 2009 Thottarayaswamy ஆல்

திருமேனி தரிசனம்
தினம்தறித்த கண்கள்
உன் தொழைதலில்
துவண்டு கிடக்கின்றது
என் முகம்தனில்…
விழியில் பிறந்து
கன்னம் கடந்து
இதழினை கடந்த
உப்புக்கரைசலோடு
எனை கடந்து போனாயோ?
பாதி தூக்கதில்
என்னை கண்விழிக்கச்செய்யும்
கனவாகப் போனாயோ?
என் கவிதைப்
புத்தகங்களின் ஓரங்களை
தின்றுப் போன கரப்பானின்
வாயிடுக்கினில் மாட்டிக்கொண்டாயோ?
பறிக்க மறந்த
பூவின் மகரந்ததில்
புதைந்திருக்கின்றாயோ?
ஊஞ்சல் காற்றாய்
என் குழல் சுருள்களில்
உன்னை சூடிக்கொண்டாயோ?
எதுவாக
இருக்கின்றாய் நீ,
நான் மட்டும்
வாழும் இவ்வுலகில்.
தேவதைகளின் ஊர்வலம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி 3, 2009 Thottarayaswamy ஆல்

நீ மிச்சம்
விட்டு சென்ற
அந்த ரோஜாவுடன்
ஒற்றையாக நான்
அதே நதிக்கரையில்
இன்றும் காத்துக்கிடக்கின்றேன்.
போர்முனையில்
புதைந்துப் போனதாக
ஊர் பேசுகின்றது.
உண்மைதானா?
நீ என்னுள் வாழ்வதாக
சொன்னது,சிருங்காரா?
உன் இதழ் பதித்து
பூவின் இதழில் இட்ட
முத்தத்தின் வாசம்
கரையெல்லம், நீ என்றே
பரவிக்கிடக்கின்றது.
மீண்டும் வருவதாய் இருந்தால்
இன்றே வந்துவிடு.
மனிக்கட்டு நரம்புகள்
அறுபட்டு, நதிக்கரையெல்லாம்
குருதியின் வாசம்.
நான் சுவாசிப்பது
இன்றே கடைசி.
கவிதை., தேவதைகளின் ஊர்வலம் இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
ஜனவரி 2, 2009 Thottarayaswamy ஆல்

மொழிமறந்து எழுதிய
கவிதையிது!
உன்
கண்மொழியினிலே
கரையொதிங்கிய பின்
நான்!
நீலங்கள் கறைந்தொழுகி
வானம் விட்டு
உன் நிழல் சேர்ந்ததால்
நிலவு திசை மாறி
போனதோ.!
சற்றே திரும்பிப் பார்!
கொஞ்சம் இழைபாரட்டும்
என் சுவாசக்கூடு!
ஆயிரம் யானைகள்கொண்டு
இந்திரலோகம்
கொண்டுச்செல்வேன்!
ஒரு நிபந்தனை மட்டும்.
கொஞ்சம் உன் சுவாசத்தை
கொடு, நுகர்ந்துபார்கவேண்டும்.
சுவாசத்தின் வாசம் என்னவென்று!
தேவதைகளின் ஊர்வலம் இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »
டிசம்பர் 18, 2008 Thottarayaswamy ஆல்

இரண்டு வரிகள்
எனக்கா எழுத மாட்டாயா?
வினவி விட்டு
சென்றுவிட்டாய் நீ!
மொத்த தமிழெழுத்துக்களும்
என்னுடன் யுத்தத்திற்கு
தயாராகிவிட்டது!
சமாதன உடன்படிக்கைக்கு
பின்- இருபது வார்த்தைகளுடன்
எழுதத் தொடங்கினேன்!
கைக்கலப்பு மேலோங்கிவிட்டது
அந்த எழுத்துகளுக்கிடையே.
முதழெழுத்தாய் யார் நிற்பதென்று!
பின் என்னதான் செய்ய?
இதையே வைத்துக்கொள்
என் அடிமை சாசனமாக!
இதற்காக நீ மற்றொரு
உலக யுத்தத்தை
என்னிடம் தொடங்கிவிடாதே!
காதல், தேவதைகளின் ஊர்வலம் இல் பதிவிடப்பட்டது | 4 மறுமொழிகள் »
டிசம்பர் 17, 2008 Thottarayaswamy ஆல்

உன் இதழில் நனைந்தே
உருகிப்போன
பொன் சங்கிலியின்
புலம்பலை கேட்டதுமுதல்
புலம்பித் தவிக்கின்றது
என் இதழ்கள் – உன்னிடம்
உருகிப்போக!
முத்தமிட்டு..
முத்தமிட்டு…
காதல், தேவதைகளின் ஊர்வலம் இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
செப்டம்பர் 15, 2008 Thottarayaswamy ஆல்

மழைக் காலக்குறிப்புகளாக
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்
குடைக்கம்பில்
ஒட்டிக்கொண்ட
உன் கைரேகையினை
மின்னல் கீற்றுகள் என!
மழை மறுத்த
காலங்களில்
உன் நினைவுச்சாயல்களில்
நான் நனைந்துகொள்ள!!
காதல், தேவதைகளின் ஊர்வலம் இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
ஆகஸ்ட் 22, 2008 Thottarayaswamy ஆல்

எல்லையில்லா
கடலினுள் இறைத்தேட
காத்துக்கிடக்கும்
குருட்டு மீனின் தைரியத்துடன்
தினமும் தேடுகின்றேன்
உன்னை
காதல் அவ்வளவு
கொடியதா என்ன?
கவிதை. இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
ஆகஸ்ட் 14, 2008 Thottarayaswamy ஆல்

உலகமயமாதலில்
ஊமையானதோ
என் இனிய இந்தியா?
மனிதயேயம் கூட
வியபாரம் ஆனதில்,
விருந்தோம்பல்
விம்மி அழுகின்றது
இன் நாட்டில்!
கிராமத்தை தொலைப்பதில்
குறியாக இருக்கின்றது
எங்கள் அரசு!
உணவு வேளையினை
மறக்க வைக்கும்
வேலைக்கு உணவு
திட்டம் !
போராளிகள் எல்லாம்
விசா எடுக்க
கடுமையான பயிற்சியில்!
தேவையானவைகள்
எல்லாம் தேவைக்கு
அதிகமாகவே இங்கு
கிடைப்பதில்லை!
குறைந்த பட்ச
அடிப்படை உடமைகள்
இங்கு நிறைவாகவே
குறைவானவர்களுக்கு!
பட்டினியினை உண்ணும்
எங்களுக்கு
ஏனோ தலைவர்கள்
சுதந்திர தினம் என்று
இனிப்பொன்றை
கொடுத்து எங்களின்
உலகசாதனையினை
முறியடித்துவிடுகின்றர்!
இந்தியாவில்
100 கோடிக்கும் மேல்
உடல்கள் உற்பத்தி
செய்யப்பட்டன !
தேசத்தை எமனின்
அந்தப்புரமாக்கிவிட்டனர்
பணம் படைத்த
இந்திரர்கள்!
இவ்வளவுக்கும்
மேலே நாங்கள்
இந்தியர்கள்!
இருந்தும்
அனைவருக்கும்
சுதந்திர தின
வாழ்த்துக்கள்!
சுதந்திரம் இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »